வருகிற கல்வி ஆண்டில் புது கல்விகொள்கையை நடைமுறைப்படுத்த ஆசிரியர்களை தயார்படுத்துமாறு, தமிழ்நாடு பல்கலைகளுக்கு யு.ஜி.சி., கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த வருடம் முதல் மத்திய அரசின் புது கல்விகொள்கை நடைமுறைக்கு வந்துவிட்டது. தமிழ்நாட்டில் நேரடியாக புது கல்விகொள்கையை எதிர்த்தாலும், அதன் முக்கியமான அம்சங்கள், அரசு பள்ளி, கல்லுாரிகளில் பல வகைகளில் அறிமுகம் ஆகியுள்ளது.
இந்த நிலையில் சென்னை பல்கலை, மதுரை காமராஜ், கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன் போன்ற பல்கலைகளுக்கு யு.ஜி.சி.,சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் வரும் கல்வியாண்டில் புது கல்விகொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். அதற்கான தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.