நாட்டில் புதிய கல்விக் கொள்கைக்குஒப்புதல் அளிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்களுடன் உரையாற்றுகிறார்.புதிய கல்விக் கொள்கைக்கு பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து புதிய கல்விக் கொள்கை நடைமுறைபடுத்துவது குறித்தும், புதிய திட்டங்கள், அதை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்தும் வீடியோ கான்பரன்சிங் முறையில் அவர் உரையாற்றுகிறார்.
புதிய கல்விக் கொள்கைக்கு ஜூன் 29 2020 அன்று அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. புதிய கல்விக் கொள்கையின் சிறப்பு அம்சங்கள் குறித்தும் அவர் எடுத்துரைக்க உள்ளார். மேலும் கல்வித்துறை தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.