Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

புதிய கல்விக் கொள்கை… ”எந்த பாகுபாடும் இல்லை” பிரதமர் மோடி உறுதி …!!

புதிய கல்விக் கொள்கையில் உயர் கல்வி சீர்திருத்தங்கள் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதில், தேசிய கல்விக் கொள்கையில் எந்த விதமான சார்புகளும் இல்லை. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு சித்தாந்தங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி கொள்கை குறித்து கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். 21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியாவுக்கு அடித்தளம் அமைப்பதற்கான தேசிய கல்வி கொள்கை. பல ஆண்டுகளாக இந்திய கல்வி முறையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.

புதிய கல்வி கொள்கை முக்கிய மாற்றமாக உள்ளது: புதிய கல்வி கொள்கையில் எந்தவித பாகுபாடும் இல்லை. ஆரோக்கியமான விவாதங்கள் கல்வித்துறையை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும்; 21 ஆம் நூற்றாண்டுக்கான அடித்தளத்தை புதிய கல்விக் கொள்கை அமைக்கும். திறன் மேம்பாட்டில் நமது கல்வி கொள்கை கவனம் செலுத்துகிறது; பரந்துபட்டு மாணவர்கள் சிந்திப்பதை நாம் ஊக்குவிக்க வேண்டும்.

இந்தியாவை வலுவான நாடாக உருவாக்குவதற்கும் வளர்ச்சியை அதிகரிக்கவும் புதிய கல்விக் கொள்கை அவசியம். எதிர்காலத்திற்கு இளைஞர்கள் தயாராகவுள்ளனர் என்பதை இந்த சீர்திருத்தம் உறுதி செய்கிறது. கல்வி மற்றும் திறன் மூலம் நமது இளைஞர்களை வலுப்படுத்த வேண்டும்.  கல்வித்துறை முன்னேற்றத்திற்கு சீர்திருத்தம் ஒன்றே வழி; மிகப்பெரிய சீர்திருத்தத்தை கண்டு சிலர் வருத்தம் அடைந்துள்ளனர். முழுமையான கல்வி என்பதே தற்போதைய தேவை, அதற்காக புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை வருங்கால சந்ததிகள் வரும் காலங்களில் வரும் சவால்களை சந்திக்க தயார் படுத்தும்

Categories

Tech |