Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“புதிய கல்விக் கொள்கை” கூடிய விரைவில் அறிமுகம்…. ஆளுநர் அறிவிப்பு….!!!

புதிய கல்வி கொள்கை திட்டம்  கூடிய விரைவில் அமல்படுத்தப்படும் என ஆளுநர் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் கூடிய விரைவில் புதிய கல்விக் கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் புதிய கல்வி கொள்கை திட்டத்தை பொருத்தவரை எந்த ஒரு மொழியையும் திணிக்கும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்படவில்லை.

நம்முடைய தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாகவே புதிய கல்விக் கொள்கை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும் புதிய கல்வி கொள்கை திட்டத்தை முழுமையாக படித்துவிட்டு கருத்து சொல்லலாம் என ஆளுநர் கூறியுள்ளார்.

Categories

Tech |