புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் நடத்தப்படும் தேர்வுகளுக்கு தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது.
மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு அட்டவணையில் தொழில்கல்வி பாடப்பிரிவு மாணவர்களுக்கு மட்டுமின்றி மற்ற மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனியாக ஒரு தொழிற்கல்வி பாடத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. மத்திய அரசின் இந்த புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் இத்தேர்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க இருக்கின்றனர்.
தமிழகத்தின் புதிய கல்விக் கொள்கை அமல் படுத்தக்கூடாது, என்று அரசு நிலைப்பாடு உள்ளதன் காரணமாக தொழில் கல்வி பாடத்திற்கான மதிப்பெண்ணை பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலில் சேர்க்க வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. பொது தேர்வு சான்றிதழ் வழக்கமான முக்கிய பாடங்களை மதிப்பெண் மட்டுமே இடம்பெற வேண்டும் எனவும் தொழிற்கல்வி பாடங்கள் மதிப்பெண் தணிக்கை குழு சான்றிதழ் வழங்க வேண்டுமெனவும் பள்ளி கல்வித்துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.