நாடு முழுவதிலும் புதிய கல்வி கொள்கை அமல்படுத்துவது குறித்து மே 17ஆம் தேதி மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரிவால் ஆலோசனை நடத்தவுள்ளார்.
நாடு முழுவதிலும் கொரோனா தொற்று பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவ மாணவிகள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து புதிய கல்வி கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக வரும் 17ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரிவால் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும் எதிர்கால கல்வி முறையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்படவுள்ளது. இந்நிலையில் புதிதாக ஏற்படுத்தப்படும் கல்விக் கொள்கையும் ஆன்லைன் வழியே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.