புதிய கல்விக் கொள்கையின் படி திறன் வளர்ப்புக்காக கூடுதல் தொழிற்கல்வி பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்துமாறு மத்திய கல்வி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இதற்காக மத்திய அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் கூடுதலாக திறன் வளர்ப்பு தொழில் கல்வி பாடத்திற்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுவரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டுமுதல் மற்ற மாணவர்களுக்கும் கூடுதலாக தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதை போல் பத்தாம் வகுப்பு இதுவரை தொழிற்கல்வி பாடமும் அதற்கான தேர்வும் கிடையாது. இந்த ஆண்டு முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்பம் மொழிப்பாட மட்டுமின்றி கூடுதலாக தொழிற்கல்வி பாடத்திற்கும் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்புகளுக்கு மே 21 ம் தேதியும், 12 ஆம் வகுப்புகளுக்கு மே 28 ம் திறன் வளர்ப்பு தொழிற்கல்வி பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மேலும் புதிய கல்விக் கொள்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்விப் பாடங்கள் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்புகளில் இந்த ஆண்டுமுதல் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என அரசு அறிவித்திருந்தாலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் அதன் அம்சங்கள் படிப்படியாக அமலுக்கு வர துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.