Categories
தேசிய செய்திகள்

புதிய கல்வி செயலி…. பிசிசிஐ தலைவரின் ட்விட்டர் பதிவு….!!!

பிசிசிஐ தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருக்கிறார். இதன் செயலாளராக மத்திய உள்துறை அமைச்சரின் மகன் ஜெய்ஷா இருக்கிறார். இந்நிலையில் சவுரவ் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் நான் கிரிக்கெட் உலகிற்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது எனவும், எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்திருந்தார். அதன் பிறகு மக்களுக்கு உதவும் வகையில் நான் ஒரு விஷயத்தை தொடங்கப் போகிறேன்‌. அது மக்களுக்கு கண்டிப்பாக மிகுந்த பயனளிக்கும் எனவும் பதிவிட்டிருந்தார்.

இதைப் பார்த்த பலரும் சவுரவ் கங்குலி கிரிக்கெட் வாரியத்தில் இருந்து விலகி, அரசியலில் இறங்கப் போகிறார் என கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் கொல்கத்தாவிற்கு சுற்றுப்பயணம் சென்றார். இவருக்கு சவ்ரவ் கங்குலி இரவு விருந்து வைத்ததுடன், அவரின் ட்விட்டர் பதிவு பற்றி பரபரப்பாக பேசப்பட்டது. அவர் பா.ஜ.கவில் இணையபோகிறார் எனவும், மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது எனவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இப்படி இருக்கையில் ஜெய்ஷா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் பிசிசிஐ பதவியிலிருந்து சவுரவ் கங்குலி விலக வில்லை என கூறியுள்ளார். இதனையடுத்து சவுரவ் கங்குலி உலக அளவிலான கல்வி செயலியை தொடங்க உள்ளதாக தற்போது விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் உலக அளவிலான ஒரு கல்வி செயலியை நான் தொடங்கியுள்ளேன். இது அனைத்து மக்களுக்கும் கண்டிப்பாக மிகுந்த பயனளிக்கும் என நான் நம்புகிறேன். மேலும் நான் சாதாரணமாகத்தான் ட்விட்டரில் பதிவு செய்தேன். அதனால் எழுந்த யூகங்களை கண்டு நான் மிகவும் வியப்படைந்தேன் என கூறியுள்ளார்

Categories

Tech |