இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்து யாரும் இதுவரை பாதிப்படைந்ததாக தெரியவில்லை. அதேபோன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக எந்தவித முகாந்திரமும் கிடையாது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தின் புதிய கவர்னர் நியமனத்தில் உள்நோக்கம் இருப்பதாக கே. எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். என்ன பேசுவதென்று தெரியயாமல் பேசுகிறார். இதற்கு முன்னதாக பல்வேறு மாநிலங்களில் கவர்னராக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணி புரிந்துள்ளார்கள். முன்னாள் தமிழக கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் 5 வருட பணி முடிந்த பின் புதிய கவர்னர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு எந்தவித அரசியல் உள்நோக்கமும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.