அந்தமான் அருகே உள்ள வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “அந்தமானை ஒட்டி இருக்கின்ற வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உண்டாகியுள்ளது. புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் கன மழை பெய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறும்”என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.