தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தொடர்ந்த கன மழை பெய்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாகியுள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் வருகின்ற 20ஆம் தேதி முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிலும் குறிப்பாக திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர்,விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ஆறு மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னையை பொருத்தவரை நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.