Categories
தேசிய செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இரண்டு புயல்கள் உருவாகி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அதனால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றன. அதுமட்டுமன்றி விவசாயிகளுக்கு பெரும் இழப்பீடு ஏற்பட்டது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில்,தற்போது தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் மந்தமான ஒட்டியுள்ள பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அது 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்பதால் மீனவர்கள் 3 நாட்களுக்கு வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் நேரடியாக மழைக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |