தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இன்னும் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உரு வாக உள்ளதால் நவம்பர் 9 முதல் 12ம் தேதி வரை தென்கிழக்கு வங்கக் கடல், தமிழக-ஆந்திர கடலோர பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கக்கடலில் ஆல் கடலுக்கு சென்ற மீனவர்கள் 9ம் தேதிக்குள் கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலத்த சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.