Categories
சென்னை மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. சென்னை மக்களே 2 நாள் அலர்ட்…..!!!!

தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று சென்னை அருகே கரையைக் கடந்தது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னைக்கு அருகே மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. இன்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வங்ககடலில் தெற்கு அந்தமான் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்குவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. இதையடுத்து அந்தமானில் நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற்று 15ஆம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியை நோக்கி வரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை தொடரும் என்றும் சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |