தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதனால் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 18ஆம் தேதி வலுப்பெற்ற ஆந்திர கடற்கரையை நெருங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதனால் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.