Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

புதிய கெட்டப்பில் நடிகர் பஹத் பாசில்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகர் பகத் பாசிலின் நியூ லுக் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மலையாள திரையுலகில் கையெத்தும் தூரத்து என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பஹத் பாசில். இதைத் தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து இவர் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

Image

தற்போது இவர் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்திலும், கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பஹத் பாசிலின் நியூ லுக் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. நீண்ட தலைமுடி, கண்ணாடியுடன் பஹத் பாசில் இருக்கும் இந்த கெட்டப் புஷ்பா படத்திற்காகவா? அல்லது விக்ரம் படத்திற்காகவா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |