Categories
தேசிய செய்திகள்

புதிய கொரோனவிலிருந்து பாதுகாக்க ” தற்போதைய தடுப்பூசிகள் போதும்”… மத்திய அரசு விளக்கம்..!!

தற்போது நடைமுறையிலுள்ள கொரோனா தடுப்பூசி புதிய வகை வைரசுக்கு எதிராக பயன்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணசாமி விஜயராகவன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது: “கொரோனாவில் ஏற்படும் மாறுபாடு தொடர்பாக தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து கவலைப்பட வேண்டாம். கொரோனா வைரஸ் விவகாரங்களில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ளலாம். நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்க இந்த தடுப்பூசிகள் பயன்படுகின்றது. தடுப்பூசியை இந்த வகை வைரஸுக்கு எதிராக செயல்படுமா? இல்லையா என்று மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.

தடுப்பூசி பயனற்றதாக மாறுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. இந்த புதிய கொரோனாவால் ஏற்படும் மாற்றங்கள் போதிய ஆதாரம் இல்லை. நமது நோய் எதிர்ப்பு சக்தி ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யத் தூண்டுகிறது. இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. முன்னதாக இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பிய 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. வெவ்வேறு ஆய்வுகளில் இந்த கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது.

3 பெங்களூரு ஆய்வகத்தில், இரண்டு ஹைதராபாத்திலும், ஒன்று புனே ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நபர்கள் அனைவரும் அந்தந்த மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட சுகாதார வசதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அவருக்கு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தல் உள்ளாகி உள்ளனர். அருகிலிருந்த பயணிகள், குடும்ப தொடர்புகள் மற்றும் பிற விமான தொடர்புகள் ஆகியோர்களும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |