ஜெர்மனியில் புதிய கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால் ஈஸ்ட்டர் பண்டிகைக்கு மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என சுகாதாரத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஜெர்மனியில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த வேகத்தில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டிருந்தால் நாடு பெரும் பாதிப்புக்குள்ளாகும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே ராபர்ட் கோட்ச் நிறுவன தலைவர் Lothar Wieler தற்போது பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் நம் நாட்டில் அதிகமாக பரவுகிறது. மேலும் இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவக் கூடியது என்றும் மிகவும் ஆபத்தானது எனவும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சராக ஜென்ட்ஸ் ஸ்பன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அனைவரும் வெளியே வரவேண்டாம் என்றும் வீட்டிற்குள்ளே இருப்பது தான் மிகவும் பாதுகாப்பானது என்று கூறியுள்ளார். மேலும் மக்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைகளைச செய்து கொள்ள வேண்டுமென்றும் சமூக இடைவெளிகளை பின்பற்றுமாறும் கூறினார்.