பிரான்ஸ் நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனிடையே பிரான்சில் கொரோனா மூன்றாவது அலையை தொடங்கி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 45,௦௦௦ பேர் புதிய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உணவகங்கள், பார்கள், திரையரங்குகள், அருங்காட்சியகம் ஆகியவை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறை அமைச்சர் Veran கூறியுள்ளார். மேலும் பொதுமக்கள் அனைவரும் இந்த கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தருமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.