நாளை முதல் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு விமான போக்குவரத்து தொடங்க இருக்கின்றது. எட்டாம் தேதியில் இருந்து பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கான விமானங்கள் வர இருக்கிறது தற்போது பிரிட்டனில் பொது முடக்கம் என்பது அமல்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 58 ஆயிரம் பேர் ஒரே நாளில் அங்கு கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்களுக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடிய சூழலில்,
மத்திய அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா வரக்கூடிய அனைத்து நபர்களுக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள… உருமாறிய கொரோனா இருக்கின்றதா ? என்பதற்கான மரபணு பரிசோதனை மேற் கொள்வதற்கு மத்திய அரசு முழுமையாக தயாராகியுள்ளது.
மற்ற மாநிலங்களுக்கும் இதற்கான ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்தியாவில் ஜனவரி 13ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்ததுள்ள நிலையில் உருமாறிய கொரோனா உள்ள பிரிட்டனுக்கு விமான சேவையை தொடங்கி இருப்பது இந்தியர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.