Categories
தேசிய செய்திகள்

புதிய கொரோனா… தமிழகத்தில் ஒருவர்… இந்தியாவில் 25 பேர்… அதிர்ச்சி…!!!

பிரிட்டனிலிருந்து இந்தியா வந்தவர்களில் 25 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். உருமாறிய கொரோனா காரணமாக பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களை தனிமைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

இதனையடுத்து பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். சுமார் 400 பேரை கண்டறிய முடியாததற்கு அவர்கள் முகவரியை மாற்றிக் கொடுத்ததும், 50 பேர் பிரிட்டனுக்கு மீண்டும் திரும்பியதும் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்ட 25 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |