Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதிய கொரோனா தமிழகம் வந்துட்டா ? 80பேரில் ஓட்டம் பிடித்த 4பேர்… மதுரையில் பரபரப்பு …!!

பிரிட்டனில் புதிய வகை கொரோனா அச்சம் இருந்து வரும் நிலையில், அங்கிருந்து மதுரை வந்த 88 பேரில் 4 பேர் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து பிரிட்டனுக்‍கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இவ்வகை கொரோனா பரவுவதைத் தடுக்‍கும் நடவடிக்‍கையாக, கடந்த ஒரு மாதத்தில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களை தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் பிரிட்டனில் இருந்து சென்னை வழியாக மதுரை விமான நிலையம் வந்த பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு மதுரை மாவட்டத்திற்கு வந்த 88 பயணிகளில் 4 பயணிகள் சுகாதாரதுறையிடம் அளித்த முகவரியில் இல்லாத நிலையில் அவர்களை தேடி வருகின்றனர்.

அவர்களது பாஸ்போர்ட் மற்றும் தொலைபேசி எண்களைக்‍ கொண்டு தற்போதைய இருப்பிடம் குறித்து போலீஸ் உதவியுடன் சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 84 பேர், வீடுகள் மற்றும் தனிமைப்படுத்தபட்ட மையங்களில் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், தலைமறைவாகியுள்ள 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது

Categories

Tech |