Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா தாக்கம்…. சுவிட்சர்லாந்தில் புதிய விதி முறைகள்….!!

புதிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் சுவிட்சர்லாந்து புதிய விதிமுறைகளை நடைமுறைபடுத்தியுள்ளது. 

சுவிட்சர்லாந்து மீண்டும் கொரோனோவை கட்டுப்படுத்துவதற்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இன்று முதல் உணவகங்கள், மதுபான விடுதிகள், விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் அடைக்கப்படும். மேலும் இவை அனைத்தும் ஜனவரி 22ஆம் தேதி வரை அடைக்கப்பட்டு தான் இருக்கும் என்று பெடரல் கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விழாக்களின் போதும் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் தான் இருக்கும் எனினும் தேவையான உணவுகளை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்வதற்காக வழி வகுக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி மற்றும் அலுவலகங்களில் உள்ள உணவகங்களுக்கு இந்த தடைகள் கிடையாது என்றும் அறிவித்துள்ளது. மேலும் கடைகள் திறக்கப்பட்டு இருக்கும் எனவும் கடைகள் இருக்கும் அளவை பொறுத்து மக்கள் கட்டுப்பாடுடன் அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவித்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் Aline barset என்பவர் எப்போது  R எண் 1 க்கு கீழ் இருக்கிறதோ அங்கு இவை அனைத்தும் திறந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் பனிச்சறுக்கு விளையாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து இடங்களிலும் மக்கள் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் எனவும் முகக்கவசம் அணிந்து தான் செல்ல வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |