Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா வைரஸ் குறித்து பிரிட்டன் அச்சம் – விமானப் போக்‍குவரத்து ரத்து..!!!

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் நோக்குடன் ஐக்கிய அரபு அமீரகத்துடான விமான போக்குவரத்துக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது.

பிரிட்டனில் உரு மாறிய கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய பின்  அந்நாட்டு அரசு பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு இடையே தடுப்பு மருந்துக்கு  எதிரான ஆற்றலுடன் கூடிய புதிய வைரஸ் உருவானால் அதன் விளைவு மிகவும் மோசமாக இருக்கும் என பிரிட்டன் அரசு அஞ்சுகிறது.

இதனால் பல்வேறு நாடுகளுடனான விமான போக்குவரத்தை தடை செய்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் பிரிட்டனுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகம், ரூவான்டம்  மற்றும் புரூண்டி போன்ற நாடுகளுடன் விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |