Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா வைரஸ்… மக்களே அச்சம் வேண்டாம்… எய்ம்ஸ் இயக்குனர்…!!!

புதிதாக உரு மாறியுள்ள கொரோனா வைரஸால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்து உள்ள புதிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளன.

இதனையடுத்து மாதத்திற்கு இரண்டு உருமாற்றங்களை கொரோனா வைரஸ் அடையக் கூடியது என்பதால் மக்கள் கவலைப்பட வேண்டாம் என எய்ம்ஸ் இயக்குனரும், கோவிட் மேலாண்மைக்கான தேசிய பணிக் குழு உறுப்பினர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அதிக தொற்றும் தன்மை கொண்டது என்றும், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறையில் மாற்றங்கள் தேவைப்படவில்லை என்பதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |