சிவாங்கி தனது இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் சிவாங்கி. இதை தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்திலும், மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி வரும் காசேதான் கடவுளடா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .
மேலும் சிவாங்கி அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் சிவாங்கி இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது இவர் இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார். இதையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.