யாஷ் நடிக்கும் கேஜிஎஃப் 2 திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது.
கேஜிஎஃப் 2 திரைப்படத்தை பிரசாந்த் நீல் இயக்க யாஷ், ஸ்ரீநிதி செட்டி, சஞ்சய்தத், பிரகாஷ்ராஜ், ரவீனா டான்டன் முதலிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றனர். இத்திரைப்படமானது ஜூலை மாதம் 16ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் கொரோனா தாக்கத்தின் காரணமாக ரிலீசை தள்ளி வைத்து தற்போது வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது.
அண்மையில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதன் ட்ரைலர்லானது தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்து இருக்கின்றது. அது என்னவென்றால் ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்திற்குள் நாட்டின் அனைத்து மொழிகளையும் சேர்த்து 109 மில்லியனை கடந்து சாதனை படைத்திருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்திருக்கிறது.