ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் வசூல் ரீதியாக பிரம்மாண்ட சாதனையை படைத்து வருகின்றது.
பிரசாந்த் நீலின் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் கே ஜி எஃப் 2. இதில் சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. உலகம் முழுவதும் முதல் நாளிலேயே 133 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படம் இந்திய அளவிலும் உலக அளவிலும் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூல் செய்த இந்தப் படம், வெளியான நான்கு நாட்களில் உலக அளவில் 500 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி சாதனை படைத்து வருகிறது. இந்தியாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூலைப் பொறுத்தவரை கடந்த இரண்டு நாட்களில் சிறிது சரிவு இருந்தாலும் மூன்றாவது நாளில் அசாதாரண வசூலை எட்டியது. சென்னையில் ஆறாவது நாள் முடிவில் விஜயின் பீஸ்ட் திரைப்படம் வெறும் 36 லட்சம் வசூல் செய்யப்பட்ட நிலையில், கேஜிஎப் திரைப்படம் 62 லட்சம் வசூல் செய்துள்ளது.மொத்தமாக கேஜிஎப் 2 சென்னையில் ரூ.3.61 கோடி வசூலித்துள்ளது.