இந்திய எல்லையில் அந்நியர்கள் நுழைவதை உடனடியாக தெரிவிக்கும் அடிப்படையிலும், மின்சாதனங்களில் ஏற்படும் தீ விபத்தை தடுக்கும் அடிப்படையிலும் தி.மலை அரசுப் பள்ளி மாணவர் ஜவகர் புதிய சாப்ட்வேர் ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
இது 10 மீட்டர் தூரம் வரை அந்நியர்கள் வருவதை தெரியப்படுத்தும். இதனை மேம்படுத்தினால் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பே அந்நியர்கள் வருவதைக் கண்டறிந்து ஊடுருவலை தடுக்க முடியும் என்று மாணவர் ஜவகர் கூறினார். இவரது அசத்தலான கண்டுபிடிப்புக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.