இந்தியாவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கும் சீனா தற்போது ஒரு புதிய சாலையை வேகமாக கட்டமைத்த வருகிறது.
லடாக் எல்லைப் பகுதியில் இந்திய சீன வீரர்கள் இடையே கடந்த 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 பேர் காயம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு மற்றும் பலர் காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய-சீன ராணுவ கமாண்டர் அளவிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கொங் டெசோ பகுதியில் நிலைநிறுத்தியுள்ள சீன படைகள், கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், சீனர்களுடனான தனது பேச்சு வார்த்தையின் போது, ” பதற்றத்தைத் தணிக்க இரு தரப்பினரும் தங்கள் நிரந்தர இடங்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்” என்று தெளிவுபடுத்தியிருந்தார். ஜூலை 14-15 தேதிகளில் கடைசி சுற்று இராணுவ பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினரும் படைகள் வாபஸ் பெறும் செயல்முறையை கண்காணிக்க ஒப்புக் கொண்டனர். அதன் பின்னர் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை.
சீனர்கள் “கிழக்கு லடாக்கில் உள்ள மோதல் ஏற்படும் பகுதிகளில் படைகளை திரும்ப பெறுவதற்கான உறுதிப்பாட்டை மதிக்கவில்லை. அரசாங்க மற்றும் இராணுவ மட்டத்தில் பல பேச்சுவார்த்தைகளின் போது ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகளின்படி அவர்கள் படைகள் பின்வாங்கவில்லை.பின்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் சீனா-இந்தியா தங்கள் படைகளை பின்னோக்கி நகர்த்த ஒப்புகொண்டதாக தகவல் தெரிந்தது.
இந்த நிலையில் தற்போது சீனா இமாசல பிரதேசத்தில் இந்திய எல்லைக்கு அருகே வேகமாக புதிதாக ஒரு சாலையை கட்டமைத்து வருவது இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் ஒரு பதற்றத்தை நிலைநாட்டி உள்ளது. சீனாவுக்கு இதுவரை சட்டவிரோத உரிமைகோரல்கள் எதும் இல்லை. இமாச்சலப் பிரதேசம் சீனாவுடன் 260 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது, மொத்த எல்லை நீளத்தில், 140 கி.மீ கின்னவுர் மாவட்டத்திலும், 80 கி.மீ எல்லை லஹால் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்திலும் உள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள கின்னவுர் மாவட்டத்தில் உள்ள சரங்கிராம எல்லையில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய சாலையை சீனா கட்டமைத்து வருகிறது. இந்திய – திபெத் பாதுகாப்புப் படையினருடன் எல்லையைப் பார்வையிட சென்ற சரங் கிராம மக்கள் 9 பேர், இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தரை அறிக்கைகளின்படி, இமாச்சலப் பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில் மொராங் பள்ளத்தாக்குக்கு எதிரே கிமோகுல் பாஸுக்கு (5641 மீட்டர்) சீனா ஒரு நகரக்கூடிய சாலையை அமைத்து வருகிறது. சமீபத்தில் சரங் கிராமத்தில் இருந்து 16 குதிரைவண்டிகள் மற்றும் 5 போர்ட்டர்களுடன் ஒன்பது பணியாளர்கள் கலப்பு ரோந்தின் போது இது கண்டறியப்பட்டது.