திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கு.க செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, என் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை. கட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன். யார் நல்லபடியாக ஆட்சி நடத்துகிறார்களோ அவர்களை பாராட்டி பேசுவேன். ஆயிரம் விளக்கு தொகுதியில் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் போட்டுயிடுவேன்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் இரண்டு முறை திமுக போட்டிருக்கிறது. திமுகவின் தலைவராக இருக்கக் கூடிய ஸ்டாலின் அவர்கள் இந்த தொகுதியில் நின்று தோற்றுப் போயிருக்கிறார். இன்னொரு முறை இந்த கட்சியில் போட்டியிட்ட ஜின்னா அவர்களும் தோற்றுப் போய் இருக்கிறார்கள். பொதுமக்கள் என்னை ஆதரிக்கிறார்கள். நான் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
எந்த கட்சிக்கும் செல்ல விரும்பவில்லை. என்னை நீக்கியது ஜனநாயக படுகொலை. துரைமுருகன் இரண்டு நிலைபாடு உள்ள ஒரு மாதிரி பேசுகிறார். நான் பதில் கொடுத்ததற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனக்கு தபால் கூட போடவில்லை.
நிறையா திமுகவினர் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். நிறைய வெளியே வருவார்கள். திமுக உதயநிதி கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஒரு குடும்பத்தில் கட்சி இருக்கிறது என்பதை வழிமொழிகிறேன்.என்னுடைய பிரச்சனைக்கு உதயநிதி ஸ்டாலின் தலையீடு தான் காரணம் என்று சொல்ல விரும்புகின்றேன் என்று தெரிவித்தார்.