தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக ரஜினி தான் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்து அதன் பின் ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணமாக அரசியியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவிப்பை வெளியிட்டார். இதனால் அவருடைய ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் இருந்தனர். மேலும் ரஜினியை கட்சி தொடங்க சொல்லியும் ஆர்ப்பாட்டம் நடத்தியும் எந்த பலனும் இல்லாமல் போனது.
இதையடுத்து ரஜினி தொடங்க இருந்த கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட அர்ஜுன மூர்த்தி ரஜினி கட்சி தொடங்க வில்லை என்று அறிவித்த பிறகு இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி தேர்தலில் போட்டியிட போட்டிருக்கிறார். இந்நிலையில் இந்த கட்சிக்கு ரோபோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சின்னம் ரஜினி ரசிகர்களை கவர்வதற்காக ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.