‘பூவே பூச்சூடவா’ சீரியல் நடிகை ரேஷ்மா புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் திரையுலகில் கடந்த சில வருடங்களில் அதிகமான சீரியல் நடிகர்கள் அறிமுகமாகிவிட்டார்கள். தற்போது ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களிலும் புதுமுக நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகின்றனர். இவர்களுக்கும் ரசிகர்கள் ஆதரவளித்து வருகின்றனர். அந்தவகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதுமுக நடிகர்கள், நடிகைகளுடன் தொடங்கப்பட்ட சீரியல் பூவே பூச்சூடவா.
கதாநாயகன் மாற்றம் செய்யப் பட்டாலும் இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ரேஷ்மா. கடந்த ஜனவரி 1 ஆம் தேதி ரேஷ்மாவும் இந்த சீரியலில் நடிக்கும் மதன் என்பவரும் காதலித்து வருவதாக அறிவித்தனர். இந்நிலையில் நடிகை ரேஷ்மா வேறொரு புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சீரியல் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.