10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள லிங்கம்பட்டி கிராமத்தில் விவசாயியான கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஷ்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹரிஷ் தனது தந்தையிடம் புதிதாக செல்போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு கோவிந்தராஜன் மறுப்பு தெரிவித்து ஒழுங்காக படிக்குமாறு கூறியுள்ளார்..
இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவன் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கால்நடை கொட்டகையில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக ஹரிஷை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஹரிஷ் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.