புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு விகிதங்கள் இன்று முதல் அமலாகும் நிலையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய நிதி அமைச்சர் என் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பேங்கிங் செய்யப்பட்ட மற்றும் முன்கூட்டியே லேபிள் இடப்பட்ட பால், தயிர், மோர், பன்னீர் போன்ற பல்வேறு பொருட்களுக்கு முன்பு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவில்லை .
தற்போது 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால் இந்த பொருட்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாக்கெட்டில் அடைத்து வைக்கப்படும் பிராண்ட் பெயர் இல்லாத அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கு முதன்முறையாக 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால் இவற்றின் விலையும் உயர வாய்ப்புள்ளது. இதனால் அரிசி, பருப்பு மற்றும் பால் பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.