பஞ்சாப் மாநிலத்தின் புதிய காவல் துறை தலைவராக ஐபிஎஸ் அதிகாரி வீரேஷ் குமார் பவ்ராவை நியமித்து அரசு சனிக்கிழமையன்று ஆணையிட்டது.
1987 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர், கடந்த 3 மாதங்களில் 3-வது காவல் துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பதவியேற்ற நாளிலிருந்து குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு அவர் பதவியில் தொடருவார். பஞ்சாப் கவர்னர் எம்பனல்மெண்ட் கமிட்டி உயர் பதவிக்கு பாவ்ரா, முன்னாள் மாநில காவல்துறை தலைவர் தினகர் குப்தா மற்றும் ஐபிஎஸ் அதிகாரி பிரபோத் குமார் ஆகிய 3 அதிகாரிகளை பரிந்துரை செய்ததாக கூறினார்.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனிடமிருந்து பெறப்பட்ட குழுவின் பரிசீலனை படி, வீரேஷ்குமார் பாவ்ரா, ஐபிஎஸ், பஞ்சாப், காவல்துறை தலைமை இயக்குனராக நியமனம் ஆனார். தொடர்ந்து மாநிலத்தில் வரவிருக்கும் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.