தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 1987 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாக 25 வயதில் தமிழ்நாடு காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் எஸ்பியாகவும், சென்னை அடையாறில் துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் இன்று காலை பொறுப்பேற்கிறார்.