இந்தியாவில் தற்போது கொரோனா பரவலானது மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்கள் என பலரும் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புதிய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்க உள்ள சுஷில் சந்திராவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
வரும் 12ஆம் தேதி சுனில் அரோரா ஓய்வு பெறுவதை அடுத்து 13ம் தேதி முதல் பதவியேற்க உள்ள நிலையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தான் வீட்டிலிருந்தே பணியாற்றுவதாக சுஷில் சந்திரா அறிவித்துள்ளார்.