Categories
தேசிய செய்திகள்

“இனி வாரந்தோறும்” பிரபல நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு…. குஷியில் ஊழியர்கள்…!!!!

இந்தியாவின் பிரபல நிறுவனமான “இந்தியா மார்ட்”  தனது ஊழியர்களுக்கு வார இறுதியில் சம்பளம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் பல தனியார் முன்னணி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை கருத்தில் கொண்டு பல  திட்டமிடல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் இந்தியாவின் சிறந்த நிறுவனங்களில் ஒன்றான “இந்தியா மார்ட்” நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை தனது ஊழியர்களுக்கு வெளியிட்டுள்ளது.

அது என்னவென்றால் மாத இறுதியில் வழங்கப்படும் சம்பளம் தற்போது, வார இறுதியில் வழங்குவதாக அறிவித்துள்ளது. மாத இறுதியில் சம்பளம் வழங்கும் நிலையில் ஊழியர்கள் அனைவரும் அதற்காக காத்திருக்க வேண்டி உள்ளது. அவர்களது,நலன்  மற்றும்  தேவைகளை கருத்தில்கொண்டு   உடனடியாக நிறைவேற்றிக் கொள்ளும் வகையில்  சம்பளம் வாரயிறுதியில் வழங்கப்படுவதாக அந்த நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் அனைத்து ஊழியர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |