Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

புதிய திட்டம் வேண்டாம்…. வங்கி ஊழியர்கள் கோரிக்கை…. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பை சார்ந்தவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அரசு அறிவித்த புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வுதிய திட்டத்தையே கொண்டு வர வேண்டும், வேலை சுமையை குறைக்கும் வகையில் காலி பணியிடங்களை குறைக்க வேண்டும்.

வங்கி ஊழியர்கள் 5 நாள் வேலை திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இதற்கு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேங்கட சுப்பிரமணியன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, கோபி, சுரேஷ், ரேணுகா மற்றும் வங்கி ஊழியர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |