தமிழகம்முழுதும் புதிய துணைமின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார். அதாவது சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தமிழகம் முழுதும் சீரான மின்விநியோகம் செய்வதற்கு ஏதுவாக 193 புதிய துணைமின் நிலையங்கள் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் தமிழகம் முழுதும் 8 ஆயிரத்து 905 புதிய மின் மாற்றிகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்து உள்ளதாகவும், சென்னை மாநகராட்சியின் 5 கோட்டங்களில் புதை வட மின்கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.