நடிகர் நாக சைதன்யாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இந்நிலையில் லால் சிங் பட்டா திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இத்திரைப்படத்தின் ரிலீசுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து இவர் தற்போது வெப்சீரிஸில் நடிக்க இருக்கின்றாராம். இந்த வெப் தொடருக்கு தூதா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
https://www.instagram.com/p/CajulMYpKT7/?utm_source=ig_web_button_share_sheet
இந்த தொடரை விக்ரம் கே.குமார் இயக்குகின்றார்.இந்த தொடரின் சூட்டிங்கானது ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை இணையதளப்பக்கத்தில் பதிவிட்டு புது தொடக்கத்திற்கு என்று குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இந்தப் புதிய தொடக்கத்திற்கு வாழ்த்துக்களை கூறிவருகின்றனர். இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும் என தெரிவித்து வருகின்றனர்.