புதிதாக உருவாக இருக்கும் படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்ததில் வைரலாகி வருகிறது.
தன்னுடைய சின்ன வயதிலேயே தமிழ் சினிமாவில் தனித்திறமையின் மூலம் புகழைப் பெற்றவர் நடிகர் சிம்பு . அதற்குப் பிறகு சிம்புவின் கோவில், மன்மதன்,வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்கள் மிகவும் வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்தன. இந்த ஆண்டில் சுந்தர். சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படம் திரைக்கு வந்தது . இதனைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு என்ற படத்தில் சிம்பு நடிப்பதற்கு தயாராக இருந்தார் .
ஆனால் படப்பிடிப்புக்கு வராமல் இருந்ததால் சிம்பு மீது புகார் அளிக்கப்பட்டு படத்திலிருந்து விலக்கப்பட்டார் . அதற்குப்பிறகு ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் காரணமாக மறுபடியும் அவர் மாநாடு படத்தில் நடிக்க சம்மதித்தார் . மாநாடு படத்தின் ஷூட்டிங் வரும் ஜனவரி மாதம் இறுதியில் ஆரம்பமாக உள்ளதாக சமூக வலைதளங்களில் படக்குழு தெரிவித்துள்ளது .
சபரிமலை சென்று விட்டு திரும்பிய சிம்புவின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வரும் சிம்புவை போல் தனது தோற்றத்தை மாற்றி உள்ளார். இதனால் எப்படி விண்ணைத்தாண்டி வருவாயா அவருக்கு திருப்புமுனையையாக அமைந்ததோ , அதேபோன்று மாநாடு படமும் வெற்றியை பெற்று தரும் என கணிக்கப்படுகிறது .