Categories
மாநில செய்திகள்

புதிய நடைமுறை அறிமுகம்….. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் முதல்முறையாக தமிழை தகுதி தேர்வாக விரிவுரையாளர் தேர்வில் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. பிற மாநிலத்தவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தக்கூடிய பல்வேறு தேர்வுகளில் நுழைவதை தடுக்கும் வகையில் இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் தமிழ் தகுதி தேர்தல் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |