Categories
உலக செய்திகள்

“புதிய பங்களிப்பாக இந்தியா வழங்கும் டோர்னியர் விமானம்”…. இந்திய தூதர் கோபால் பாக்லே பேச்சு….!!!!!

கடந்த 2018 ஆம் வருடம் இந்தியா இலங்கை இடையே டெல்லியில் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது கடல் பகுதி கண்காணிப்புக்கான இரண்டு டோர்னியர் விமானங்களை வழங்க வேண்டும் என இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சூழலில் இலங்கை கடற்படைக்கு ஒரு டோர்னியர் விமானத்தை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றுள்ளது. கொழும்பு  சர்வதேச விமான நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள இலங்கை விமானப்படை தளத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் அந்த நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்றுள்ளார்.

இந்தியா சார்பில் இலங்கைக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள கடற்படை துணை தளபதி எஸ் என் கோர்மடே கொழும்பில் உள்ள இந்திய தூதர் கோபால் பாக்லே பங்கேற்றுள்ளனர். பரஸ்பர புரிதல், நம்பிக்கை, ஒத்துழைப்பால் இந்தியா இலங்கை பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு புதிய பங்களிப்பாக தற்போது இந்தியா வழங்கும் டோர்னியர் விமானம் அமைந்துள்ளது என கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இந்த விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியும் இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையினருக்கு இந்தியா வழங்கியுள்ளது. இந்த நிலையில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு வரும் இரண்டு டோர்னியர் விமானங்களை இலங்கைக்கு இந்தியா வழங்க இருக்கின்றது.

அவ்வாறு வழங்கும்போது தற்போது கொடுக்கப்பட்டிருக்கின்ற டோர்னியர்   கடல் பகுதி கண்காணிப்பு விமானத்தை  இந்திய கடற்படை திரும்ப பெற்றுக் கொள்ளும். மேலும் இலங்கை தன்னுடைய கடல் பகுதி கண்காணிப்பு திறனை மேம்படுத்துவதற்காக நீண்ட காலமாக கோரி வந்த டோர்னியர்   விமானத்தை தனது சுதந்திர தினத்தன்று அந்த நாட்டிற்கு இந்தியா வழங்கியுள்ளது. அதேசமயம் இந்தியாவின் ஆட்சியபத்தை மீறி இலங்கை துறைமுகத்திற்குள் சீன உளவு கப்பலுக்கு இன்று அனுமதி அளிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் நேற்று இந்த நிகழ்ச்சி நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |