மிர்ச்சி சிவா அடுத்ததாக ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் திரையுலகில் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான சென்னை 28, சரோஜா, தமிழ் படம், கலகலப்பு, வணக்கம் சென்னை ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இவர் சுமோ, பார்ட்டி, சலூன், இடியட், காசேதான் கடவுளடா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ராம்பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள இடியட் திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் மிர்ச்சி சிவா அடுத்ததாக நடிக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இந்த படத்திற்கு ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் ஷா எழுதி இயக்கும் இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .