Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய படத்தில் இணையும்…” விஜய் டிவி மற்றும் சன் டிவி நட்சத்திரங்கள்”… யார் யார் தெரியுமா..?

நடிகர் பரத் மற்றும் ஜனனி ஐயர் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லிப்ரா ப்ரொடெக்ஷன்ஸ் தாயாரிப்பில் நடிகர் பரத் மற்றும் ஜனனி ஐயர் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லிப்ரா ப்ரொடெக்ஷன்ஸ் புதிய அலுவலகத்தை திறக்க தனது அடுத்தகட்ட திரைப்படத்தை வெளியிடுவதற்கான அறிவிப்பை விடுத்துள்ளது .அறிமுக இயக்குனரான விஜயராஜ் ‘முன்னறிவான் ‘எனும் இப்படத்தை இயக்குகிறார். இந்த படம் ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இப்படத்தில் விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியலில் நடித்து வரும் பிரபலங்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவி நட்சத்திரமான மிர்ச்சி செந்தில், அசார் மற்றும் சன் டிவி சித்தி சீரியலில் நடித்துவரும் மகாலட்சுமி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

Categories

Tech |