Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய படத்தில் மாற்றுத்திறனாளியாக சமுத்திரகனி…. வெளியான தகவல்….!!!!

இயக்குனராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த சமுத்திரகனி, தற்போது நடிகராக மாறி தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தான் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு ‘விமானம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கே.கே.கிரியேட்டிவ் வெர்க்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் சமுத்திரகனி மாற்றுத்திறனாளியாக நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் விரைவில் புதிய அப்டேட்டுகள் வெளியாகவிருக்கிறது.

Categories

Tech |