புதுச்சேரியில் திடீர் திருப்பமாக பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து என் ஆர் காங்கிரஸ் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதிலும் சில கட்சிகள் தொகுதி பங்கீடு பற்றிய தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனால் மாநிலம் முழுவதிலும் தீவிர கண்காணிப்பு பணி நடந்துவருகின்றது.
இந்நிலையில் புதுச்சேரியில் திடீர் திருப்பமாக பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலக என் ஆர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை முன்னிறுத்த பாஜக மேலிடம் முன்வரவில்லை. அதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமையும் என அமித்ஷா பேசியதால் என் ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளது.