Categories
மாநில செய்திகள்

புதிய பாடத்திட்டங்கள்…. 2022-2023 ஆம் கல்வியாண்டில் ஆன்-லைனில் கலந்தாய்வு…. அமைச்சர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டிலும் ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க 10 புதிய பாடத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மாநிலத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த பாடத்திட்டங்கள் இருக்கும். முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை மற்றும் கரூர் உள்ளிட்ட 13 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த பாடத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

உயர் மருத்துவ மின்னணுவியல், தளவாட தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு புதிய துறைகளில் பாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும். நீட் மருத்துவ கலந்தாய்வு பிறகே பொறியியல் கலந்தாய்வு தொடங்கும். தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டிலும் ஆன்லைன் மூலமாக தான் பொறியியல் கலந்தாய்வு நடைபெறும். அரசு பள்ளிகளில் விண்ணப்பிப்பதற்கான வசதிகளை செய்து தர பள்ளிக் கல்வித் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என அமைச்சர்.

Categories

Tech |